பெங்களூரு: பதினோராவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐந்தாவது முறையாகத் தோல்வி கண்டது. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக நேற்று முன் தினம் இரவு நடந்த ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. நட்சத்திர வீரர் ஏபி டி வில்லி யர்ஸ் காய்ச்சலால் அவதிப்பட்ட தால் அவருக்குப் பதிலாக பெங்க ளூரு அணியில் பிரெண்டன் மெக்கல்லம் சேர்க்கப்பட்டார்.
குவின்டன் டி காக்=மெக்கல்லம் இணை முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்டங்களைச் சேர்த்தது. இருப் பினும் அடுத்து வந்தோரில் கோஹ்லியைத் தவிர மற்றவர்கள் சிறப்பாக ஆடாததால் பெங்களூரு அணி பெரிய இலக்கை நிர்ண யிக்க முடியாமல் போனது. கோஹ்லி ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை விளாச, பெங்களூரு அணி 175 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த கோல்கத்தா அணியில் தொடக்க வீரர் கிறிஸ் லின் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங் களை எடுக்க, ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் அவ்வணி வெற்றி பெற்றது. தமது அணியின் களக்காப்பு மோசமாக இருந்ததாக கோஹ்லி ஆதங்கப்பட்டார். "இப்படி களக்காப்பு செய்தால் வெற்றிபெறத் தகுதியற்றவர்களா கவே இருப்போம். பல்வேறு அம்சங் களில் எங்களை நாங்கள் மேம் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்," என்றார் கோஹ்லி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மற்ற வீரர்கள் களக்காப்பில் சொதப்பியபோதும் அணித்தலைவர் விராத் கோஹ்லி மட்டும் திடலில் 'சூப்பர்மேன்' போல செயல்பட்டார். கோல்கத்தா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் அடித்த பந்தை கோஹ்லி கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து பிடித்து ஆட்டமிழக்கச் செய்த அற்புதத்தைக் கண்டு அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா உட்பட அரங்கிலிருந்த பார்வையாளர்கள் அனைவரும் சொக்கிப் போயினர். படம்: ஏஎஃப்பி

