'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தயாராகும் சென்னை

'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தயாராகும் சென்னை

2 mins read
c4749645-8bc3-4d23-b0a6-f28f88b3b38b
-

புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி யில் டோனியின் அதிரடி ஆட்டத் தால் சென்னை அணியிடம் மண்ணைக் கவ்வியது டெல்லி அணி. முந்திய பருவங்களில் 20 சிக்சர்கள் அடிக்க குறைந்தபட்சம் 16 ஆட்டங்களாவது டோனிக்குத் தேவைப்பட்டன. ஆனால் இப்பரு வத்தில் எட்டே ஆட்டங்களில் 20 சிக்சர்கள் அடித்து அசத்தியுள் ளார் டோனி. மேலும் இப்பருவத்தில் டோனி யின் பந்தடிப்பு விகிதம் நூறு பந்துகளுக்கு 169.23 ஓட்டங் களாக உள்ளது ஆகும். டெல்லி அணிக்கெதிரான ஆட் டத்தில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 22 பந்துகளில் 51 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் டோனி.

டோனியின் அதிரடி ஆட்டத் தால் 'பிளே ஆஃப்' சுற்றுக்குத் தகுதிபெறத் தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் முதலில் பந்தடித்தது. சென்னை அணியின் ஷேன் வாட்சன் = டு பிளஸ்ஸி இணை தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இந்த இணை 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டு பிளஸ்ஸி 33 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந் தார். அடுத்தடுத்து மூன்று விக் கெட்டுகள் சரிய 4வது விக் கெட்டுக்கு அம்பதி ராயுடுவுடன் அணித் தலைவர் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிக்சர், பவுண்டரியுமாக அடித்தனர். இந்த ஜோடி 79 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் அம்பதி ராயுடு 24 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து, 212 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா, கோலின் மன்ரோ இறங்கினர். பிருத்வி, கோலின் மன்ரோ, ஷ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்த வெளியேறினர். ஆனால் ரிஷப் பன்ட் பொறுப்பு டன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு விஜய் சங்கர் உறு துணையாக இருந்தார்.

சென்னை அணியின் ஷேன் வாட்சன் சிக்சர் விளாசுவதை வியந்து பார்க்கிறார் டெல்லி அணியின் ரிஷப் பன்ட். படம்: ஏஎஃப்பி