லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான டோட் டன்ஹம் ஹாட்ஸ்பர் அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதிபெறும் வாய்ப்பை வலுப் படுத்திக் கொண்டுள்ளது. இபிஎல் ஆட்டம் ஒன்றில் நேற்று அதிகாலை வாட்ஃபர்ட், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக் கள் மோதின. டெலி அலியின் கோல் முன் னிலை பெற்றுத் தர, ஹேரி கேனின் கோல் ஸ்பர்ஸ் குழுவின் வெற்றியை உறுதி செய்தது. வாட்ஃபர்ட் கோல்காப்பாளர் செய்த தவற்றைச் சரியாகப் பயன் படுத்திக்கொண்ட அலி, 16வது நிமிடத்தில் கோல் போட்டார். தொடர்ந்து பிற்பாதியில் கிரன் டிரிப்பர் உதைத்த பந்தை கோலாக்கினார் ஹேரி கேன். நடப்பு லீக்கில் அவரது 27வது கோல் இது.
தங்கக் காலணிக்காக போட்டி போடும் சாலாவைவிட நான்கு கோல்கள் பின்தங்கியுள்ள கேன், இப்போட்டியில் மேலும் இரண்டு கோல்களைப் போடும் வாய்ப்பு களைத் தவறவிட்டுவிட்டார். அதோடு, ஆஃப்சைடில் இருந்து கேன் பந்தை உதைத்த தாலும் நடுவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே, வார்ஃபர்டின் இரண்டு கோல் போடும் முயற்சி களை ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் முறியடித்தார்.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் முதல் கோலை அடிக்கும் டெலி அலி. படம்: ராய்ட்டர்ஸ்

