ரோம்: ஐரோப்பாவின் முன்னணி காற்பந்துத் தொடரான சாம்பி யன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக் குள் லிவர்பூல் காற்பந்துக் குழு கிட்டத்தட்ட நுழைந்துவிட்டது. ஆன்ஃபீல்ட் அரங்கில் நடந்த அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் ஏஎஸ் ரோமா காற்பந்துக் குழுவை 5=2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, மூன்று கோல்கள் முன்னிலையில் உள்ளது அக்குழு.
இந்த நிலையில், நாளை அதி காலை நடக்கவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற் பதற்காக லிவர்பூல் குழு ரோம் சென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் இரண்டு கோல் வித்தியாசத்தில் தோற்றால்கூட லிவர்பூல் குழு இறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். அது சாத்தியமாகும் பட்சத்தில், 2007ஆம் ஆண்டிற்குப் பின் அக்குழு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இதற்கிடையே, திடலுக்கு வெளியிலும் பதற்றம் அதிகமாக உள்ளது. ஏனெனில், கடந்த வாரம் நடந்த முதல் அரையிறுதியின்போது சான் காக்ஸ், 53, என்ற லிவர்பூல் ரசிகரை ரோமா குழு ரசிகர்கள் இருவர் தாக்கியதில், அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார். இதையடுத்து, அவ்விரு ரோமா ரசிகர்களும் கைது செய் யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தைப் பார்ப்பதற்காக 5,000 ரசிகர்கள் ரோம் நகருக்குச் சென் றுள்ளதால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லிவர்பூல் காற்பந்துக் குழு நிர்வாகி யர்கன் கிளோப்

