பெங்களூரு: மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக் கெட் தொடரின் 'பிளே-=ஆஃப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது பெங்களூரு அணி. எதிரணிக்கு எளிய இலக் கையே பெங்களூரு அணி நிர்ணயித்திருந்தபோதும், அந்த அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சு, களக்காப்பு ஆகியவை வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. அடுத்து வரும் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெறுவதன் மூலம் பெங்களூரு அணியின் 'பிளே=ஆஃப்' கனவு நனவாகலாம்.
கடந்த பருவ வெற்றியாளரான மும்பை அணி, இந்த அளவுக்கு மோசமாகும் என அதன் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஏறக்குறைய அந்த அணியின் 'பிளே=ஆஃப்' சுற்றுக் கனவு நனவாக வாய்ப்பில்லை என்றே கூறலாம். தென்னாப்பிரிக்கத் தொடரில் இருந்தே பந்தடிப்பில் சொதப்பிய ரோகித் சர்மா, ஐபிஎல் தொடரில் தேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் அவரின் மந்த மான ஆட்டம் அணியின் தோல் விக்குக் காரணமாக அமைந்துவிட் டது. நேற்றைய ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற மும்பை அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பந்தடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் சேர்த்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ஓட்டங்கள் என்பது எளிய இலக்காகக் கருதப்பட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகி யோர் களமிறங்கினர். இஷான் கிஷான், சௌத்தி ஓவரில் முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக் காமல் ஆட்டமிழந்தார். அணித் தலைவர் ரோகித் சர்மா உமேஷ் யாதவ் பந்தில் ஓட்டம் எடுக்காமல் ஆட்டம் இழந் தார். பந்தடிப்பாளர்கள் அடுத் தடுத்து ஆட்டமிழக்க மும்பை அணி 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
பாண்டியா அரைசதம் அடிக்க, மும்பை அணி 20 ஓவர்கள் முடி வில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்று பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.
மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மாவின் விக்கெட்டைக் கைப்பற்றிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெங்களூரு அணியின் வீரர் உமேஷ் யாதவ். படம்: ஏஎஃப்பி

