சிங்கப்பூர்: ஆசியான் காற்பந்துச் சம்மேளனத்தின் இவ்வாண்டு சூசுகி கிண்ணப் போட்டியில் சிங்கப்பூரின் லயன்ஸ் குழு பலம் வாய்ந்த குழுக்களோடு மோத வேண்டியுள்ளது. நேற்று நடந்த குலுக்கலில் தாய்லாந்து, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய வலுவான குழுக்களோடு 'பி' பிரிவில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது. புருணை-=திமோர் லெஸ்டே தகுதிச் சுற்று ஆட்டம் இப்பிரிவின் இன்னோர் போட்டியாளரை முடிவு செய்யும். 'ஏ' பிரிவில் வியட்னாம், மலேசியா, மியன்மார், கம்போ டியா, லாவோஸ் குழுக்கள் இடம் பெற்றுள்ளன.
நவம்பர் 8ஆம் தொடங்கவுள்ள இப்போட்டியில் இருந்து தொடர்ந்து 3வது முறையாக முதல் சுற்றிலேயே வெளி யேறுவதைத் தவிர்க்க வேண்டு மானால் சிங்கப்பூர் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

