பயர்னை ஓரங்கட்டி இறுதிக்கு முன்னேறியது ரியால் மட்ரிட்

பயர்னை ஓரங்கட்டி இறுதிக்கு முன்னேறியது ரியால் மட்ரிட்

1 mins read
7698ad37-ec5f-44ca-8471-5b611fe46d9a
-

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந் துப் போட்டியின் இறுதிப் போட் டிக்கு முன்னேறியுள்ளது ரியால் மட்ரிட். நேற்று அதிகாலை இத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் பயர்ன் மியூனிக் குழுவுடன் 2=2 எனச் சமநிலை கண்ட ரியால் மட்ரிட், 4=3 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை அடிப்படை யில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சொந்த மண்ணில் நடந்த முதல் சுற்றில் 2-=1 என பின்தங்கி இருந்த பயர்ன், இறுதிப் போட் டிக்குத் தகுதிபெற வேண்டுமா னால் வெற்றி பெற்றேயாக வேண் டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

லா லீகா கிண்ணத்தைத் தவற விட்டதால் நெருக்கடியில் இருக் கும் ரியால் மட்ரிட் நிர்வாகி ஸினி டின் ஸிடான், நேற்றைய ஆட்டத் தில் கேரத் பேலிற்குப் பதில் கரிம் பென்சிமாவைக் களம் இறக்கினார். மிகுந்த ஆர்வத்துடன் விளை யாடிய பயர்ன் வீரர்கள் மூன்றாவது நிமிடத்திலேயே முன்னிலை பெற்ற னர். ஜோ‌ஷூவா கிமிச் போட்ட அந்தக் கோலை அடுத்த 10 நிமி டங்களுக்குள் சமன்செய்து பயர்ன் குழுவைப் பதறச் செய்தார் ரியாலின் கரிம் பென்சிமா. பிற்பாதி ஆட்டம் தொடங்கிய வுடன் இரண்டாவது கோலைப் போட்டார் பென்சிமா.

பயர்ன் மியூனிக் வீரர்களிடம் இருந்து பந்தைப் பறிக்கப் பாயும் ரியால் கோல்காப்பாளர் நவாஸ் கெய்லோர் (நடுவில்). படம்: ஏஎஃப்பி