சூதாட்டம்: மலேசிய பூப்பந்தாட்ட வீரர்களுக்கு 20 ஆண்டு வரை தடை

சூதாட்டம்: மலேசிய பூப்பந்தாட்ட வீரர்களுக்கு 20 ஆண்டு வரை தடை

1 mins read

கோலாலம்பூர்: ஊழல், ஆட்டத்தை முன்கூட்டியே நிர்ணயிக்கும் சூதாட்டத்தில் ஈடுபட்ட மலேசியப் பூப்பந் தாட்ட வீரர்களுக்கு 20 ஆண்டு கள் வரை தடை விதிக்கப்பட்டுள் ளது. இளை யோருக்கான போட்டியின் முன் னாள் வெற்றியாளரான ஜுல்ஃபட்லி ஸுல்கிஃபிலி, 25, என்பவருக்கு 20 ஆண்டுக்காலத் தடையும் 25,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டு ள்ளது. அதே போல், டான் சுவான் சியங், 31, என்பவருக்கு 15 ஆண்டுக்கால தடையும் 15,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக உலக பூப்பந்து சம்மேளனம் வெளி யிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இவர்கள் சம்மேளனத் தின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் சம்மேளனக் குழு சிங்கப்பூரில் விசாரணை நடத்தி யது. அப்போது இவர்கள் இரு வரும் குறிப்பிட்ட காலக்கட்டத் தில் நடந்த குறிப்பிட்ட போட்டி களில் ஊழலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இடைக்காலத் தடை விதிக்கப் பட்ட கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் இவர்களது தடைக் காலம் பின் தேதியிடப்படுவதாக வும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.