மெல்போர்ன்: கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு மற்றும் புதுமுக வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும் இந்தத் தவற்றுக்குப் பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் டேரன் லீமன் பதவி விலகினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுநராக டெஸ்ட் போட்டி யின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லேங்கர் (47) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இம்மாதம் 22ஆம் தேதி பயிற்றுநராகப் பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு புதிய கிரிக்கெட் பயிற்றுநர்
1 mins read

