கடைசி ஓவரில் டெல்லி அணி நான்கு ஓட்டங்களில் வெற்றி

கடைசி ஓவரில் டெல்லி அணி நான்கு ஓட்டங்களில் வெற்றி

1 mins read

புதுடெல்லி: ஐபிஎல் லீக் போட்டி யில் கடைசி ஓவரில் டெல்லி அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 4 ஓட்டங்கள் வித்தி யாசத் தில் ராஜஸ்தான் அணியைத் தோற்கடித்தது. ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் அணி பந் தடிப்பைத் தேர்வு செய்தது. கடைசி ஓவரில் 14 ஓட் டங்கள் தேவைப்பட்டன. போல்ட் வீசிய 12வது ஓவரின் முதல் 4 பந்தில் 5 ஓட்டங்கள் கிடைத்தன. ஐந்தா வது பந்தை கௌதம் பவுண்டரி க்கு அனுப்ப, கடைசிப் பந்தில் 6 ஓட் டங்கள் தேவைப்பட்டன. ஆனால், ஓர் ஓட்டம் மட்டுமே எடுக்கப் பட்டது. ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந் தது. கவுதம் (18) வெளியாகாமல் இருந்தார். டெல்லி அணி சார்பில் போல்ட், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.