ரோம்: கிட்டத்தட்ட 11 ஆண்டு களுக் குப் பிறகு இங்கிலாந்தின் லிவர்பூல் காற்பந்துக் குழு சாம் பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதில் லிவர்பூல் குழுவின் ஆட்டத்தில் அனல் பறக்கும் என அதன் பயிற்றுவிப்பாளர் யர்கன் கிளோப் கூறியுள்ளார். அரை இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் இத்தாலியின் ரோமா குழுவை தனது சொந்த அரங்கில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது லிவர்பூல்.
இத்தாலியில் புதன்கிழமை பின்னிரவு நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நான்கு கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிச் சுற்றுக்கு ரோமா தகுதி பெறுவது நிச்சயம் எனும் நோக்கில் களம் இறங்கிய ரோமாவுக்கு எடுத்த எடுப்பிலேயே அதிர்ச்சி. லிவர்பூலின் மானே ஆட்டத்தின் ஒன்பதாவது நிமிடத்திலேயே ஒரு கோலைப் போட்டார். ஆறு நிமிடங்களில் லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் அடித்த சொந்த கோலால் கோல் எண்ணிக்கை 1-1 என்று ஆனது. ஆனால் பத்து நிமிடங் களில் லிவர்பூலின் ஜார்ஜினியோ வைனால்டம் ஒரு கோல் போட்டு லிவர்பூலின் கோல் எண்ணிக் கையை உயர்த்தினார்.
தலையால் முட்டி லிவர்பூல் குழுவின் இரண்டாம் கோலைப் போட்ட ஜார்ஜினியோ வைனால்டம். படம்: ராய்ட்டர்ஸ்

