'ஆர்சனல் நிர்வாகியாக இவர் பொருத்தமானவர்'

1 mins read

மான்செஸ்டர்: தமது நீண்ட கால உதவியாளரான ருய் ஃபரியா, ஆர்சனல் காற்பந்துக் குழுவின் நிர்வாகி பதவிக்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனல் நிர்வாகியாக இருந்து வரும் ஆர்சன் வெங்கர் இப்பருவத்துடன் அங்கிருந்து விடைபெறுகிறார். இதனால், அடுத்த நிர்வாகிக்குத் தகுதியான ஒருவரை ஆர்சனல் குழு தேடி வருகிறது. அவர்களின் பட்டியலில் யுனைடெட் துணை பயிற்றுவிப்பாளரான 42 வயது போர்ச்சுகீசியர் ஃபரியாவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. 2001 முதல் மொரின்யோ உடன் இணைந்து பணியாற்றி வரும் ஃபரியா, ஆறு குழுக்கள் சார்பில் 25 கிண்ணங்களையும் வென்றுள்ளார்.