மட்ரிட்: இந்தப் பருவத்துடன் ஆர்சனல் காற்பந்துக் குழுவில் இருந்து விடைபெறும் அதன் நிர்வாகி ஆர்சன் வெங்கரால் கடைசி வரை ஐரோப்பியக் கிண்ணம் ஒன்றை வென்று தர முடியாமலேயே போய்விட்டது. ஆர்சனல் நிர்வாகியாக கடந்த 22 ஆண்டுகளில் மூன்று முறை இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தையும் ஏழு முறை எஃப்ஏ கிண்ணத்தையும் வென்று தந்துள் ளார் அவர். இந்நிலையில், நடப்பு யூரோப்பா லீக்கில் அரையிறுதிக்கு முன்னேறியதால் ஆர்சனல் வீரர்கள் எப்படியேனும் கிண்ணம் வென்று அவருக்குக் காணிக்கையாக்குவர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்த நம்பிக்கையைச் சிதறடித் தது இரண்டாவது அரையிறுதியில் முற்பாதி யின் கடைசித் தருணத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் ஆட்டக்காரர் டியேகோ கோஸ்டா அடித்த ஒற்றை கோல். முதல் அரையிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்திருந்த தால் ஒட்டுமொத்த கோல் கணக்கில் 2=1 என முன்னிலை பெற்ற அட்லெட்டிகோ குழு இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
அட்லெட்டிகோ மட்ரிட் குழுவின் டியேகோ கோஸ்டா (நடுவில்) அடித்த இந்த ஒற்றை கோல் ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர் வெறுங்கையுடன் விடைபெறக் காரணமாக அமைந்தது. படம்: ராய்ட்டர்ஸ்

