லண்டன்: புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் காற் பந்துக் குழுவை வீழ்த்தி, இங்கி லிஷ் பிரிமியர் லீக்கின் அடுத்த பருவத்தில் விளையாடும் வாய்ப்பை உறுதிசெய்தது பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியன் குழு. யுனைடெட் குழுவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ, கடந்த வார இறுதியில் ஆர்சனலுக்கு எதிரா கக் களமிறங்கிய அக்குழுவில் ஆறு மாற்றங்களைச் செய்ததால் பாதகமே விளைந்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பாஸ்கல் கிராஸ் அடித்த கோலால் 1=0 என்ற கணக்கில் பிரைட்டன் வெற்றி பெற்றது. 1982ஆம் ஆண் டிற்குப் பிறகு அக்குழு யுனைடெட் டைத் தோற்கடித்திருப்பது இதுவே முதன்முறை.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு எதிராக கோலடித்து முன்னிலை பெற்ற மகிழ்ச்சியில் பிரைட்டன் ஆட்டக்காரர்கள் இப்படிக் கூடிக் களிக்க, அரங்கில் திரண்டிருந்த அக்குழுவின் ரசிகர்களும் 'நாங்கள் தொடர்ந்து நீடிக்கிறோம்' என்று உற்சாகமாகப் பாடி, மகிழ்ச்சியில் திளைத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்
மேலும் epaper.tamilmurasu.com.sg

