ஜடேஜாவுக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு

ஜடேஜாவுக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பு

1 mins read

புனே: சென்னை அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவர் ரவிந்திர ஜடேஜா. ரெய்னாவுக்கு இணையான களக்காப்பாளரும் கூட. இரண்டு ஆண்டு தடைக்குப் பின் திரும்பிய அவர், சென்னை அணியில் ரூ.7 கோடிக்குத் தக்கவைக்கப் பட்டார். இந்தப் பருவத்தில் பந்தடிப்பும் சரியில்லை பந்து வீச்சும் சரியில்லை. இதுவரை 9 போட்டிக ளில் 59 ஓட்டங்கள் எடுத்து, மூன்று விக்கெட்டுகள்தான் வீழ்த்தி உள்ளார். தற்போது களக்காப்பிலும் சொதப்புகிறார்.

கோல்கத்தா அணிக்கு எதிராக ஆசிஃப் ஓவரில், சுனில் நரைன் அடுத்தடுத்துக் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்புகளைக் கோட்டைவிட்டார். இதனால், இவரை அணியில் சேர்க்க ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு முன்னதாக பிராவோவை களமிறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். டோனி பாய் என்ற பெயரிலான ரசிகர் ஒருவர் டுவிட்டரில், "ஜடேஜாவுக்கு என்ன வேலை என்பதை டோனி தெரிவித்தால் நன்றாக இருக்கும். தயவுசெய்து இவரை ஆட்டத்தில் சேர்க்க வேண்டாம்," என்று பதிவிட்டுள்ளார்.