வெஸ்ட் புரோம்விச் குழுவிடம் தோற்றது டோட்டன்ஹம்

வெஸ்ட் புரோம்விச் குழுவிடம் தோற்றது டோட்டன்ஹம்

1 mins read
b8af8e48-a7cc-4996-a10e-12d4402db294
-

லண்டன்: டோட்டன்ஹம் காற்பந்து குழுவிற்கு எதிராக வெஸ்ட் புரோம்விச் குழுவின் கடைசி நேர கோல் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அக்குழு தொடர்வதற்கான வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்து உள்ளது. தோல்வியோ சமநிலையோ எது வாக இருந்தாலும் பிரிமியர் லீக் கில் இருந்து வெளியேறவேண் டிய அபாய நிலையில் நேற்று அதிகாலை நடந்த போட்டியில் டோட்டன்ஹம் குழுவை எதிர் கொண்டது வெஸ்ட் புரோம்விச். ஆட்ட நேரம் முழுவதும் இரு குழுக்களும் கோல் எதுவும் போடாத நிலையில், கூடுதல் நேரத்தின் போது வெஸ்ட் புரோம் குழுவின் ஜேக் லிவர்மூர் போட்ட கோலால் ஆட்டம் 1=0 என முடிந்தது.

ஆட்ட நேரம் முழுவதும் கோல் விழாத நிலையில், கூடுதல் நேரத்தின் போது வெஸ்ட் புரோம்விச் குழுவின் வெற்றி கோலைப் போட்டார் ஜேக் லிவர்மோர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் epaper.tamilmurasu.com.sg