லண்டன்: இங்கிலிஷ் காற்பந்தின் பிரபல மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் முன்னாள் நிர்வாகி 76 வயது சர் அலெக்ஸ் ஃபெர்கு சனுக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட் டதை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வும் தற்போது அவரது உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தாகவும் மருத்துவமனை வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அவர் பூரண குணமடைய வேண்டும் எனக் காற்பந்துப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகியாக இருந்த 26 ஆண்டுகளில் 38 வெற்றிக் கிண்ணங்களை வென்றார் சர் அலெக்ஸ் ஃபெர்குசன். படம்: ஊடகம்

