இந்தூர்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத் தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது. பூவா தலையாவில் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதலில் பந்துவீசியது. முதலில் பந்தடித்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்கி ஷார்ட் (2), ரகானே (5) அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். பட்லர் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு ஜாம்சன் (28), பென் ஸ்டோக்ஸ் (12), ராகுல் திரிபாதி (11) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஓட்டம் ஏதும் குவிக்க இயலவில்லை.
ஷ்ரேயாஸ் கோபால் ஓரள விற்குத் தாக்குப்பிடித்து 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் அடிக்க, ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் சேர்த்தது.
ராஜஸ்தான் அணித் தலைவர் ரகானேயின் (நடுவில்) விக்கெட்டைச் சாய்க்க முயலும் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல் (வலது). படம்: ஏஎஃப்பி

