விடைபெற்றார் வெங்கர்

1 mins read
534c2e86-7645-4f31-b167-d426bdec5a1d
-

லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவின் ரசிகர்களிடமிருந்து அக்குழுவின் நிர்வாகி ஆர்சன் வெங்கர் விடைபெற்றுக்கொண் டார். கடந்த 22 ஆண்டுகளாக ஆர்சனலை வழிநடத்திய வெங்கர் இந்தப் பருவத்துடன் பதவி விலகு கிறார். நேற்று முன்தினம் ஆர்சன லுக்குச் சொந்தமான எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் பர்ன்லி குழுவை 5=0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் பந்தாடியது. இது ஆர்சனலின் சொந்த அரங்கில் ஆர்சன் வெங்கர் தலைமையில் நடைபெற்ற 606வது ஆட்டம்.

1996ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று முதன்முதலாக ஆர்சன் வெங்கரின் தலைமையின்கீழ் ஆர்சனல் சொந்த அரங்கில் களமிறங்கியது. அப்போது ஆர்சனலின் சொந்த அரங்கமாக ஹைபரி இருந்தது. கொவன்ட்ரிக்கு எதிரான அந்த ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலை யில் முடிந்தது.

எமிரேட்ஸ் விளையாட்டரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றுக்கொண்ட ஆர்சன் வெங்கர். படம்: ஏஎஃப்பி