ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பிடித்த உணவு என்றால் அது ஹைதராபாத் பிரியாணிதான். பெங்களூர் அணியின் முகமது சிராஜ், தனது சக வீரர்களுக்கு தன் வீட்டில் பிரியாணி விருந்து அளித்து மகிழ்வித்தார். ஐபிஎல் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் பெங்களூரு = ஹைதராபாத் அணிகள் பொருதின. இப்போட்டிக்கு முன்பாக பெங்களூரு கேப்டன் விராத் கோஹ்லி, சாஹல், மன்தீப்சிங் மற்றும் சில வீரர்கள் ஹைதராபாத்தில் உள்ள சக அணி வீரரான முகமது சிராஜ் வீட்டுக்குச் சென்று ஹைதராபாத் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
சக வீரர்களுக்குப் பிரியாணி விருந்து அளித்த சிராஜ்
1 mins read

