ஃபெர்குசன் தேறி வருகிறார்

ஃபெர்குசன் தேறி வருகிறார்

1 mins read

லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட் அணியின் முன்னாள் நிர்வாகி அலெக்ஸ் ஃபர்குசன் மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தேறி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து தனது குடும்பத்தினருடன் அவரால் பேச முடிவதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பெர்குசன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். பின்னர் அவருக்கு அவசரமாக மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தாகவும் அதற்கான பலன் கிடைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் முழுமையாகக் குணமடைய சற்று காலமாகலாம். அதுவரை யிலும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.