ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது ராஜஸ் தான் ராயல்ஸ். பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்தடித்தது. அந்த அணியின் ரகானே, ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். ரகானே 9 ஓட்டங்களிலும் கிருஷ்ணப்பா கௌதம் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 58 பந்துகளில் 9 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந் தார். சஞ்சு சாம்சன் 22 ஓட்டங் களும் ஸ்டூவர்ட் பின்னி 11 ஓட்டங்களும் பென் ஸ்டோக்ஸ் 14 ஓட்டங்களும் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது.
சக வீரருடன் இணைந்து ஓட்டங்களைக் குவிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென் ஸ்டோக்ஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

