இவ்வாண்டு நடைபெற இருக்கும் ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை, பளுதூக்குதல், சைக்கிளோட்டுதல் ஆகியவற்றில் சிங்கப்பூர் முதல்முறையாகப் பங்கெடுக்கும். இந்தத் தகவலை சிங்கப்பூர் தேசிய உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் மன்றம் நேற்று வெளியிட்டது. ஆசிய உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுகள் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதியிலிருந்து 13ஆம் தேதிவரை நடைபெறுகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த மொத்தம் 42 வீரர்கள் இதில் பங்கெடுக்கின்றனர்.
ஆசிய பாரா விளையாட்டுகள்; களமிறங்கும் சிங்கப்பூர் அணி
1 mins read

