லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் தனது இடத்தைத் தக்கவைத்துள்ளது சவுத்ஹேம்டன். நேற்று முன்தினம் சுவான்சி சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் 1=0 எனும் கோல் கணக்கில் அது வெற்றி பெற்றது. மாற்று ஆட்டக்காரராகக் களம் இறங்கிய மனோலோ கப்பியாடினி ஆட்டத்தின் 72வது நிமிடத்தில் வெற்றி கோலைப் போட்டார். சவுத்ஹேம்டன் வெற்றி பெற்றதை அடுத்து, லீக் பட்டியலில் 19வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் பிரோம்விச் ஆல்பியன் அடுத்த பருவத்தில் இரண்டாவது நிலை லீக்குக்குத் தள்ளப் பட்டுள்ளது. இதுவரை ஸ்டோக் சிட்டியும் வெஸ்ட் பிரோம் குழுவும் இரண்டாவது நிலை லீக்குக்குத் தள்ளப்பட்டுள்ளன.
சவுத்ஹேம்டனின் வெற்றி கோலைப் போட்டு தமது சக வீரர்களுடன் கொண்டாடும் மனோலோ கப்பியாடினி (இடமிருந்து மூன்றாவது). ஏஎஃப்பி

