கோல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் குவித்தது. இஷான் கிஷன் 21 பந்தில் 62 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 6 சிக்சர்), பென் கட்டிங் 9 பந்தில் 24 ஓட்டங்களும், (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பின்னர் ஆடிய கோல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.1 ஓவரில் 108 ஓட்டங்களில் சுருண்டது. இத னால் மும்பை இந்தியன்ஸ் 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இஷான் கிஷனுக்கு ரோகித் பாராட்டு
1 mins read

