இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டமொன்றில் செல்சி குழு ஹடைர்ஸ்ஃபீல்டுடன் 1-1 என சமநிலை கண்டது. அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாட பிரிமியர் லீக் தரவரிசையில் முதல் நான்கு இடங்களுக்குள் வர வேண்டிய நிலையில் செல்சி நேற்றைய போட்டி முடிவால் அந்த நிலையைத் தவற விட்டுள்ளது. இனி, இந்தப் பருவத்தின் கடைசி ஆட்டத்தில் அது வென்று தற்போது நான்காம் இடத்தில் இருக்கும் லிவர்பூல் பிரைட்டனுட னான ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே செல்சி நான்காம் நிலைக்கு செல்ல முடியும்.
ஆனால், இந்த முடிவால் ஹடர்ஸ்ஃபீல்டு குழு பிரிமியர் லீக்கில் தொடர்ந்திருக்க தேவை யான புள்ளிகளை பெற்று தனது நிலையைக் காப்பாற்றிக் கொண் டுள்ளது. ஹடர்ஸ்ஃபீல்டு குழு அபாரமான தற்காப்பு ஆட்டம் ஆடி செல்சியை திணறடித்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

