ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது ஹைதராபாத்

1 mins read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரின் 42வது லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பந்தடிப்பைத் தேர்வு செய்- தது. அந்த அணியின் பிரித்வி ஷா 9 ஓட்டங்களிலும் ஜேசன் ராய் 11 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந் தனர். அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 3 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். 4வது வீரராகக் களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.

ஹர்சல் பட்டேல் 24 ஓட்டங்களிலும் மேக்ஸ்வெல் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரிஷப் பந்த் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களு டன் 128 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 187 ஓட் டங் கள் எடுத்தது. ஹைதராபாத் அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக் கெட்டுகளையும் புவ னேஷ் குமார் ஒரு விக் கெட் டையும் வீழ்த்தினர்.