நேற்று அதிகாலை வெஸ்ட்ஹேம் உடனான காற்பந்துப் போட்டியில் 0=0 என சமநிலை கண்டு இங்கிலிஷ் பிரிமியர் லீக் தர வரிசையில் தனது இரண்டா மிடத்தை மான்செஸ்டர் யுனை- டெட் தக்கவைத்துக் கொண்டது பற்றி அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ, "இதில் கொண் டாடுவதற்கு ஒன்றுமில்லை," என்று கூறியுள்ளார். வெஸ்ட்ஹேம் கோல்காப்பாள ரின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற முடியாமல் போன நிலையில் கைவசம் ஓர் ஆட்டம் மிஞ்சி உள்ள நிலையிலும் யுனைடெட் அணி அடுத்த நிலையில் இருக் கும் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியைவிட நான்கு புள்ளிகள் கூடுதலாகப் பெற்றுள்ளது. ஆகை யால், இரண்டாம் இடம் அதற்கு உறுதி. இந்த நிலை தனக்கு ஏற்புடையதுதான் என்று கூறிய மொரின்யோ, "ஆனால், அதற்காக நான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கப் போவதில்லை, அது என்னுடைய இயல்பு அல்ல, மான்செஸ்டர் யுனைடெட்டின் இயல்புமல்ல.
கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை: மொரின்யோ
1 mins read

