கார்டியோலா விருப்பம்: அகுவேரோ சிட்டியில் தொடர்ந்து இருக்கவேண்டும்

1 mins read

மான்செஸ்டர்: நட்சத்திர காற்பந்து வீரர் செர்ஜியோ அகுவேரோ மான்செஸ்டர் சிட்டியில் தொடர வேண்டும் என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா விருப்பம் தெரிவித்துள்ளார். அகுவேரோ விரும்பும் வரை சிட்டியில் இருக்கலாம் என்று அவர் கூறினார். அடுத்த பருவம் தொடங்குவதற்குள் அகுவேரோவை ஒப்பந்தம் செய்ய ஸ்பானிய குழுவான அட்லெட்டிகோ மட்ரிட் விரும்புவதாக நம்பப்படுகிறது. அகுவேராவுக்கும் கார்டியோலாவுக்கும் இடையே முன்பு வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனாலும் அகுவேரோவை இழக்க கார்டியோலாவுக்கு மனம் இல்லை. அடுத்த மாதம் தமது 30வது பிறந்தநாளைக் கொண்டாடும் அகுவேரோ இதுவரை சிட்டிக்காக 199 கோல்களைப் போட்டு சாதனை படைத்துள்ளார்.