ராஜஸ்தானிடம் தோற்ற சென்னை அணி

1 mins read
e40e2ced-23dc-4765-9ed3-28cdffcc4cf2
-

ஜெய்ப்பூர்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்றுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப் பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியின் ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங் கினர். ராயுடு 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

வாட்சன் மற்றும் ரெய்னா ஜோடி 86 ஓட்டங்கள் சேர்த்தது. வாட்சன் 39 ஓட்டங்களில் வெளியேறினார். ரெய்னா சிறப்பாக விளையாடி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய டோனி நிதானமாக ஆடினார். பில்லிங்ஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ஓட்டங்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பந்தடிக்கும் சென்னையின் ஷேன் வாட்சன் (இடது). படம்: ஏஎஃப்பி