சாம்பியன்ஸ் லீக் இடத்துக்கு கடுமையான போட்டி

சாம்பியன்ஸ் லீக் இடத்துக்கு கடுமையான போட்டி

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் இப் பருவத்துக்கான கடைசி ஆட்டங் கள் இன்று நடைபெறுகின்றன. லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் அடுத்த பருவத்துக்கான சாம்பி யன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும். மான்செஸ்டர் சிட்டி, மான் செஸ்டர் யுனைடெட், ஸ்பர்ஸ் ஆகிய குழுக்கள் அவற்றின் சாம்பியன்ஸ் லீக் இடத்தை ஏற்கெனவே உறுதி செய்துவிட்டன. எஞ்சியிருக்கும் ஓர் இடத்துக் காக லிவர்பூலுக்கும் செல்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது லிவர்பூல் 72 புள்ளி களுடன் நான்காவது இடத்திலும் செல்சி 70 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் பிரைட் டனுக்கு எதிராக லிவர்பூல் களமிறங்குகிறது. இந்த ஆட்டம் லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் நடைபெறுகிறது.