ஜெர்மன் காற்பந்து லீக் போட்டி ஒன்றில், பொருஷியா மொன்சன்கிளாட்பக் குழுவை 2=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஹேம்பர்க் குழு. ஆனால், மற்றோர் போட்டியில் கொலோன் குழுவிற்கு எதிரான ஆட்டத்தை உல்ஃப்ஸ்பர்க் குழு 4=1 என வென்றதால், ஹேம்பர்க் குழு முதன்முறை யாக ஜெர்மன் புன்டஸ்லீகா எனும் ஜெர்மன் காற்பந்து லீக் பட்டியலில் இருந்து வெளியேற நேர்ந்தது. இத னால் கோபமடைந்த ஹேம்பர்க் ரசிகர்கள் மைதானத்தில் தீப்பந்தங்களை வீசி ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்தும் போலிசார் மைதானத்திற்குள் அணிவகுத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்
ஹேம்பர்க் காற்பந்துக் குழு வெளியேறியதால் ரசிகர்கள் ஆத்திரம்
1 mins read
-

