மட்ரிட்: மட்ரிட் பொது°விருது டென்னிஸ் பட்டத்தை வென்றார் செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா. இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, நெதர்லாந் தின் கிகி பெர்டென்சை எதிர் கொண்டார். 10ஆம் நிலை வீராங்கனை யான கிகி, பெட்ரா கிவிட்டோ விற்கு கடும் நெருக்கடி கொடுத் தார். இதனால் முதல் செட் 'டை பிரேக்' வரை சென்றது. இறுதியில் அந்த செட்டை கிவிட்டோவா 7(8) - 6(6) எனப் போராடி கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டை 4-6 என இழந் தார். 2வது செட்டை இழந்த கிவிட்டோவா சுதாரித்துக் கொண்டு சாம்பியன் பட்டத்தைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் ஆக்ரோஷமாக விளையாடி 6-3 எனக் கைப்பற்றினார். கிகி பெர்டென்ஸை 2-1 என வீழ்த்தி 3வது முறையாக வெற்றி யாளர் பட்டத்தைக் கைப்பற்றினார் கிவிட்டோவா.
டென்னிஸ்: மட்ரிட் பொது விருது வென்றார் கிவிட்டோவா
1 mins read

