மட்ரிட்: ஸ்பானிய லா லீகா காற் பந்து ஆட்டமொன்றில் கேரத் பேல் முனைப்புடன் விளையாடிய நிலை யில், செல்டா வீகோ குழுவை 6=0 என நசுக்கியது ரியால் மட்ரிட். இக்குழுக்கள் மோதிய நேற் றைய போட்டியில் ரொனால்டோ காயம் காரணமாக களமிறங்க வில்லை என்றாலும் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல் ரியால் மட்ரிட் குழுத் தலைவர் செர்ஜியோ ரமோ சிற்கும் நேற்று ஓய்வு கொடுக்கப் பட்டிருந்தது. எனவே, கேரத் பேலை நம்பி செல்டா வீகோவிற்கு எதிராகக் களமிறங்கிய ரியால் மட்ரிட் குழுவை அவர் கைவிடவில்லை. இப்போட்டியின் முதல் அரை மணி நேரத்தில் பேல் போட்ட இரட்டை கோல் ரியால் வீரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
கேரத் பேல் (வலக்கோடி) போட்ட இரட்டை கோல் உட்பட ரியால் மட்ரிட் குழுவிற்கு மொத்தம் ஆறு கோல்கள் விழுந்தன. படம்: ஏஎஃப்பி

