இடைக்கால பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி அகமது நியமனம்

இடைக்கால பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி அகமது நியமனம்

1 mins read
e1553470-f273-4cc1-b1b0-45b8bfccabb8
-

இவ்வாண்டு இறுதிவரை சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக தேசிய குழுவின் முன்னாள் தலைவர் ஃபாண்டி அகமது, 55 (படம்), நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் லிம் கியோ தோங்கும் துணைத் தலைவர் எட்வின் தோங்கும் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நேற்று இதனை அறிவித்தனர். "பயிற்றுவிப்பாளர் நியமனத்தில் அவசரப்பட விரும்பவில்லை. அடுத்த பயிற்றுவிப்பாளர் நாங்கள் விரும்பும் நிலைக்கு தேசிய குழுவை எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறோம்.

இவ்வாண்டு சிங்கப்பூர் காற்பந்துக் குழுவிற்கு மிக முக்கியமான ஆண்டு. நவம்பர் 9ஆம் தேதி ஆசியான் காற்பந்து வெற்றியாளர் (ஏஎஃப்எஃப்) கிண்ணத்தின் முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் குழு, இந்தோனீசியாவை எதிர்த்தாடவுள்ளது. அதை மனதிற் கொண்டு, ஏஎஃப்எஃப் கிண்ணத் திற்கான பயிற்றுவிப்பாளராக ஃபாண்டி அகமதுவை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று திரு லிம் தெரிவித்தார். கிட்டத்தட்ட ஈராண்டுகளாக தேசிய குழுவின் பயிற்றுவிப்பாளராக இருந்த திரு வி.சுந்தரமூர்த்தி, சென்ற மாதம் 9ஆம் தேதி அப்பதவியில் இருந்து விலகினார்.