பிரேசில் அணி அறிவிப்பு

பிரேசில் அணி அறிவிப்பு

1 mins read
5dd30978-dd33-4e25-8dd4-dda8d3d4034d
-

ரியோ டி ஜெனிரோ: அடுத்த மாதம் 14ஆம் தேதி ரஷ்யாவில் தொடங்கவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற் கும் 23 பேர் கொண்ட பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள முன்னணி ஆட்டக்காரர் நெய்மார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழுவிற்காக விளையாடி வரும் நெய்மார் வலது பாதத்தில் ஏற்பட்ட காயத்திற்காக கடந்த மார்ச் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அத னால், அடுத்த மூன்று மாதங் களுக்கு அவரால் காற்பந்து ஆட முடியாது என்று பிரேசில் அணி யின் மருத்துவர் கூறியிருந்தார். மான்செஸ்டர் சிட்டி குழுவைச் சேர்ந்த எடர்சன், டேனிலோ, ஃபெர்னாண்டினோ, கேப்ரியல் ஜீசஸ் ஆகிய நால்வருக்கும் பிரேசில் அணியில் இடமளிக்கப் பட்டுள்ளது.