இங்கிலாந்துக் குழுவில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடமில்லை

இங்கிலாந்துக் குழுவில் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடமில்லை

1 mins read

லண்டன்: உலகக் கிண்ண காற் பந்துப் போட்டிகளுக்கான வீரர் களை அந்தக் குழுவின் நிர்வாகி யான கேரத் செளத்கேட் அறிவிக்க உள்ளார். இதில் அவர் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு பதிலாக தற் பொழுது நல்லவிதமாக திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு விளையாடும் வீரர்களையே தேர்ந் தெடுப்பார் என்று கூறப்படுகிறது. உலகக் கிண்ண காற்பந்துக் குழுவிற்கு 23 வீரர்களைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அதன் நிர்வாகியான கேரத் சௌத் கேட் உடையது.

இதைத் தொடர்ந்து அவர் அனுபவம் வாய்ந்த, ஆனால் தற்போதைய நிலையில் அவரவர் குழுக்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கோல்காப்பாளர் ஜோ ஹார்ட், ஜேக் வில்‌ஷியர் போன்ற வீரர்களைத் தேர்வு செய்யமாட்டார் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. இங்கிலாந்து இருக்கும் 'பி' பிரிவிற்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் அது எந்தக் குழுவிடமும் தோற்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.