லண்டன்: டிரினிடாட் அண்டு டொபாகோ தேசிய காற்பந்து அணிக்காகவும் அஸ்டோன் வில்லா அணிக்காகவும் விளை யாடி யவர் ஜிலாய்டு சாமுவல். 37 வயதான இவர் குழந்தை களைப் பள்ளியில் விட்டுவிட்டு ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சாமுவலின் கார் எதிரே வந்த வேனுடன் மோதியது. இதில் சாமுவல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரினாட்டின் தெற்மேற்குப் பகுதியான சான் ஃபெர்னாண்டோ வில் பிறந்த இவர், இளம் வயதிலேயே இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து அணிக்காக 18 வயதிற்குட் பட்டோர், 21 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் விளை யாடியுள் ளார்.
முன்னாள் அஸ்டோன் வில்லா காற்பந்து அணி வீரர் விபத்தில் பலி
1 mins read

