பெர்லின்: 32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலகக் கிண் ணக் காற்பந்துப் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 14-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஜெர்மனி அணியின் 27 வீரர்கள் கொண்ட உத்தேச பட்டியலை பயிற்சியாளர் ஜோசிம் லோ நேற்று முன்தினம் வெளியிட்டார். ஜெர்மனி அணி 2014ஆ-ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவைத் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.
இதில் கூடுதல் நேரத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்த நடுகள வீரர் 25 வயதான மரியோ கோட்சே இந்த உலகக் கிண்ணத்திற்கான அணியில் இருந்து கழற்றி விடப் பட்டு இருக்கிறார். அவர் போதிய பார்மில் இல்லாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருப்பதாக பயிற்சியாளர் ஜோசிம் லோ விளக்கம் அளித்தார்.

