17 ஆண்டுகளுக்குப் பின் யுவென்டஸ் குழுவிலிருந்து விடைபெறும் புஃபான்

17 ஆண்டுகளுக்குப் பின் யுவென்டஸ் குழுவிலிருந்து விடைபெறும் புஃபான்

1 mins read
9f03ffa3-2d5d-4ddc-981a-12a908d9d8c2
-

டூரின்: இத்தாலிய காற்பந்து லீக் வெற்றியாளரான யுவென்டஸ் குழு விற்காகக் கடந்த 17 ஆண்டுகளாக விளையாடி வரும் கோல் காப்பாளரும் இத்தாலி அணியின் முன்னாள் தலை வருமான ஜியன்லுய்ஜி புஃபான், 40, (படம்) அக்குழுவில் இருந்து விடைபெறு வதாக அறிவித்துள்ளார். நாளை நடக்கவிருக்கும் ஹெலாஸ் வெரோனா குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் யுவென்டஸ் சார்பில் 640வது முறையாகவும் கடைசி முறையாகவும் புஃபான் களமிறங்க உள்ளார்.

புஃபான் தலைமையில் இத்தாலியின் முதல்நிலை காற்பந்து லீக்கான 'சீரி ஏ'வில் தொடர்ந்து ஏழாவது பருவமாகப் பட்டத்தை வென்றுள்ள யுவென்டஸ், தொடர்ந்து 4வது ஆண்டாக இத்தாலியக் கிண்ணத் தையும் கைப்பற்றி சாதித்துள்ளது. யுவென்டசுக்குப் பிந்திய தனது எதிர் காலம் குறித்து அடுத்த சில வாரங்களில் முடிவு செய்யவிருப்பதாக புஃபான் தெரிவித் துள்ளார். "அடுத்த மூன்று நாட்கள் உணர்ச்சி பூர்வமானதாக இருக்கும். அதன்பின் சிறிது காலத்தில் நிச்சயமாக உறுதியான முடிவை எடுப்பேன்," என்றார் இவர்.

தனது இயல்பும் ஆன்மாவும் என்ன சொல் கிறதோ, அதன்படி நடக்க முற்படுவேன் என்றும் இவர் சொன்னார். புஃபானை ஒப்பந்தம் செய்ய வேறு பல குழுக்கள் ஆர்வமாக இருப்பதாக யுவென்டஸ் தலைவர் ஆண்ட்ரியா அக்னெலி தெரிவித்துள் ளார். இதற்கிடையே, புஃபானை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் காற்பந்துக் குழு ஆர்வமாக இருப்பதாக 'டெய்லி மிரர்' செய்தி கூறுகிறது.