மான்செஸ்டர்: பல்வேறு சாதனை களைத் தகர்த்து, மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைக் கைப்பற் றியதில் அதன் நிர்வாகி ஜோசஃப் கார்டியோலாவே (படம்) முழுமுதற் காரணம் என்றால் அது மிகை இல்லை. மகிழ்ச்சிகரமான இந்த வெற்றித் தருணத்தில் சிட்டி குழுவுடனான தமது ஒப்பந்தத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளார் கார்டியோலா. அடுத்த பருவத்துடன் இவரது ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலை யில், 2021ஆம் ஆண்டு வரை சிட்டியுடன் இணைந்து செயல்படும் வகையில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். "மிக்க மகிழ்ச்சியாகவும் பரவச மாகவும் இருக்கிறேன். சிட்டியுடன் பணியாற்றுவது இன்பமே! சிட்டி ஆட்டக்காரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஒவ்வொரு நாளும் அனுபவித்து மகிழ்கிறேன்.
வரும் ஆண்டுகளிலும் ஒருங்கி ணைந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முயல்வோம்," என் றார் 47 வயதான கார்டியோலா.

