கிண்ணம் வெல்ல கடைசி வாய்ப்பு

கிண்ணம் வெல்ல கடைசி வாய்ப்பு

1 mins read

ப. பாலசுப்பிரமணியம்

கடந்த பருவத்தில் மூன்று கிண் ணங்களை வென்ற மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு இப் பருவத்தில் ஒரு கிண்ணத்தை யாவது வெல்வதற்கு இன்றிரவு 12.15 மணிக்கு நடக்கவிருக்கும் எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்டமே கடைசி வாய்ப்பு. அதேபோல கடந்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கை எளிதில் கைப்பற்றிய செல்சி குழு, இந்தப் பருவத்தில் ஏமாற்றம் தரும் வகையில் விளையாடியதற்கு இந்த கிண்ணத்தை வெல்வதன் மூலம் கொஞ்சமாவது ஆறுதல் கிட்டும். வெம்பிளி அரங்கில் நடக்க உள்ள இந்த விறுவிறுப்பான ஆட் டத்தில் வென்றே ஆகவேண்டும் என்ற துடிப்புடன் இரு குழுவின் நிர்வாகிகளும் உள்ளனர்.

செல்சி குழுவின் நிர்வாகி அன்டோனியோ கோன்டே பதவி நீக்கம் செய்யப்படலாம் என பரவ லாகப் பேசப்பட்டு வரும் நிலையில், அப்படி நிகழ்ந்தாலும் சாதித்த திருப்தியுடன் கிளம்ப கோன்டே குறியாக இருப்பார்.