ரோம்: இத்தாலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா தமது வலிமையை நிரூபித்துள்ளார். இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் லாட்வியாவின் ஜெலேனா ஒஸ்டாபென்கோவை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத் துக்குத் தகுதி பெற்றார் ஷர போவா. கடுமையான போட் டிக்குப் பிறகு 6=7, 6=4, 7=5 எனும் செட் கணக்கில் ஷர போவா வாகை சூடினார். ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரத்தில் ஷரபோவாவுக்கு 15 மாதத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தண்டனைக் காலத்துக்குப் பிறகு அவர் மீண்டும் களமிறங்கியுள்ளார். விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் ஷரபோவா பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கி உள்ளார். ஆண்கள் பிரிவின் காலிறுதியில் நடால் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள ஷரபோவா. படம்: ஏஎஃப்பி

