புதுடெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி பூவா தலையாவில் வென்று பந்துவீச்சைத் தேர்வுச் செய்தார். அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 17 ஓட்டங்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந் தனர். அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட ரிஷப் பந்த் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட மிழந்தார்.
பந்தைப் பறக்கவிடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் (வலது). அதைப் பார்த்து செய்வதறியாது தவிக்கும் சென்னை அணித் தலைவர் டோனி. படம்: ஏஎஃப்பி

