லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தைத் தக்கவைக்க முடி யாமல் போனதுடன் பட்டியலில் ஐந்தாம் நிலையைப் பிடித்ததால் அடுத்த பருவ சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பையும் தவறவிட்ட செல்சி காற்பந்துக் குழு, எஃப்ஏ கிண்ணத் தைக் கைப்பற்றி ஆறுதல் தேடிக் கொண்டது. அதே நேரத்தில், எந்தவொரு கிண்ணத்தையும் வெல்ல முடியாத தால் இந்தப் பருவம் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிற்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. வெம்பிளி விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த எஃப்ஏ கிண்ண இறுதி ஆட்டமே இப்பருவத்தில் கிண்ணம் வெல்ல இரு குழுக்களுக்கும் கடைசி வாய்ப்பாக இருந்தது.
முதல் அரை மணி நேரத்தி லேயே ஆட்டத்தின் முடிவு எழுதப் பட்டுவிட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் பந்துடன் மேன்யூ வலையை நோக்கி முன்னேறிய செல்சியின் ஈடன் ஹசார்டுக்கு முட்டுக்கட்டை இட்டு பந்தைப் பறிக்க முயன்றார் மேன்யூ ஆட்டக்காரர் ஃபில் ஜோன்ஸ். ஆனால், அது முடியா மல் போய், ஹசார்ட் கீழே விழவும் அவர் காரணமாக அமைந்ததால் செல்சி குழுவிற்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர்.

