ஸிடான் மகனின் அறிமுக ஆட்டத்தில் சறுக்கிய ரியால்

ஸிடான் மகனின் அறிமுக ஆட்டத்தில் சறுக்கிய ரியால்

1 mins read
0dd30c95-3be6-4c44-85ec-6c684b2a386e
-

மட்ரிட்: பிரபல முன்னாள் பிரெஞ்சு ஆட்டக்காரர் ஸினடின் ஸிடானின் மகன் லூக்கா ஸிடானும் காற்பந்து அரங்கில் அடியெடுத்து வைத்துவிட்டார். தம் தந்தை நிர்வகிக்கும் ரியால் மட்ரிட் சார்பாக தொழில் முறை ஆட்டக்காரராக முதல் முறையாகக் களமிறங்கிய அவ ருக்கு அறிமுக ஆட்டத்தில் கசப்பான அனுபவமே கிட்டியது. இப்பருவ ஸ்பானிய லா லீகா வில் தனது கடைசி ஆட்டத்தில் வியாரியால் குழுவுடன் ரியால் குழு நேற்று அதிகாலை மோதி யது. கேரத் பேல், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் மூலம் வந்த கோல்களால் ஒரு கட்டத் தில் 2=0 என முன்னிலையில் இருந்த ரியால், பின்னர் இரு கோல்களை விட்டுத் தந்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தது.