மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமிய்ர லீக் பட்டத்தை வெல்ல மான் செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு பொருத்தமான ஆட்டக் காரர்களை வாங்கவேண்டும் என்று அக்குழு வீரர் நெமான்யா மாட்டிச் கூறியுள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கை இரண்டாமிடத்தில் முடித்த மான் செஸ்டர் யுனைடெட், செல்சியிடம் எஃப்ஏ கிண்ணத்தையும் இழந்து இப்பருவத்தில் எக்கிண்ணமும் வெல்ல முடியாமல் வெறுங்கை யோடு திரும்பியது.
இப்பருவத்தின் தொடக்கத்தில் மாட்டிச், லுக்காகு உள்ளிட்ட முன் னணி வீரர்களை 148 மில்லியன் பவுண்டுக்கு மேன்யூ வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் லுக்காகுவை 75 மில்லி யன் பவுண்டுக்கும் மாட்டிச்சை 40 மில்லியன் பவுண்டுக்கும் மேன்யூ வாங்கியது. கடந்த இரண்டு பருவங்களில் ஆட்டக்காரர்களை வாங்குவதற் காக 261.67 மில்லியன் பவுண்டு மேன்யூ செலவிட்டு இருந்தாலும் அது பிரிமியர் லீக் பட்டம் வென்ற மான்செஸ்டர் சிட்டி குழுவைவிட செலவிட்ட தொகையைவிட 98.37 மில்லியன் பவுண்டு குறைவே.
செல்சியின் முன்னாள் வீரரும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் தற்போதைய வீரருமான நெமான்யா மாட்டிச். படம்: ராய்ட்டர்ஸ்

