லண்டன்: ரஷ்யாவில் நடைபெற வுள்ள உலகக்°கிண்ணக் காற்பந்திற்கான இங்கிலாந்து அணிக்கு ஹேரி கேன், 24, தலைமை வகிப்பார் என்று அதன் நிர்வாகி கேரத் சௌத்கேட் அறிவித்துள்ளார். பிரிமியர் லீக்கின் தற்போ தைய பருவத்தில் 41 கோல் களைப் போட்ட டோட்டன்ஹம் வீரர் ஹேரி கேன், அதிக கோல்கள் போட்டவர்கள் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்தார். அதுபோல் இங்கி லாந்து அணிக்காக 23 ஆட் டங்களில் 12 கோல்களைப் போட்டுள்ளார் ஹேரி கேன். எரிக் டியர், ஜோர்டன் ஹெண்டர்சன், டேனி வெல்பேக் உள்ளிட்டோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜெண்டினா, உள்ளிட்ட நாடுகளும் அணியை அறிவித்துள்ளன.
இங்கிலாந்து உலகக் கிண்ண அணி அறிவிப்பு
1 mins read

