லண்டன்: ஆர்சனல் காற்பந்துக் குழுவின் புதிய நிர்வாகியாக பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவின் முன்னாள் நிர்வாகி உனை எம்ரி (படம்) நியமிக்கப்படலாம் என்று ஊடகச் செய்திகள் தெரி விக்கின்றன. ஆர்சனல் குழுவின் நிர்வாகி பதவியில் இருந்து வெங்கர் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு பல காற்பந்தாட்ட பிரபலங்களின் பெயர்கள் யூகிக்கப்படுகின்றன.
செல்சி, ரியால் மட்ரிட் குழுக் களின் முன்னாள் நிர்வாகி கார்லோ அன்சிலோட்டி, யுவெண் டஸ் நிர்வாகி அலக்ரி, பார்சிலோ னாவின் முன்னாள் நிர்வாகி லுயிஸ் என்ரிக், ஆர்சனல் குழு வின் முன்னாள் வீரர்கள் அர் டிட்டா, தியரி ஹென்ரி, பேட்ரிக் விய்ரா உள்ளிட்டோர் ஆர்சனல் நிர்வாகியாகக்கூடும் என்று கூறப்பட்டன. அதிலும் பெரும்பாலும் ஆர்சன லின் முன்னாள் வீரரும் மான்செஸ் டர் சிட்டியின் துணை நிர்வாகியு மான அர்டிட்டா தான் வெங்கரின் பதவிக்கு வரக்கூடும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவருடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.