பூவா தலையாவுக்கு முடிவு கட்ட கங்குலி எதிர்ப்பு

பூவா தலையாவுக்கு முடிவு கட்ட கங்குலி எதிர்ப்பு

1 mins read

மும்பை: கிரிக்கெட் விளையாட் டில் முதலில் யார் பந்தடிப்பு என்பதைத் தீர்மானிக்கும் பூவா தலையா முறைக்கு முடிவு கட்ட இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துலக கிரிக்கெட் மன்றக் குழு, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் பூவா தலையா முறைக்கு முடி வுக்கு கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது.

பூவா தலையாவின் முடிவு பெரும்பாலும் உள்ளுர் அணிக்கு சாதகமாக அமைந்துவிடுவதாகக் கூறுகிறது ஐசிசி. ஆனால், கங்குலியோ, "பூவா தலையா முறையை முடிவுக்குக் கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. "உள்ளுர் அணிகளுக்கு சாதகமாக இருப்பதால் இதனை முடிவுக்குக் கொண்டு வருவ தாகக் கூறப்படுகிறது. "ஆனால், உள்ளூர் அணி பூவா தலையாவில் தோற்கும் பட்சத்தில், அது எப்படி அவர்க ளுக்குச் சாதகமாக அமையும்," என்கிறார்.